
விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை கல்லுாரியில், கல்லுாரி நிர்வாகம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் தாமோதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ரெட்கிராஸ் மாவட்ட துணைத் தலைவர், வணிகவியல் துறைத் தலைவர் செல்வராணி சிறப்புரையாற்றினார்.
இந்திய மருத்துவ சங்க கிளைச் செயலாளர் டாக்டர் சவுந்தர்ராஜன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ரத்த வங்கி மருத்துவர் விஜயா, இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட செயலர்கள் வைத்தீஸ்வரன், சிவகங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் சச்சிதானந்தம், கனிமொழி உள்ளிட்டோர் முகாமினை ஒருங்கிணைத்தனர். முகாமில் 120 மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.