/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓடையில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுமி உடல் மீட்பு
/
ஓடையில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுமி உடல் மீட்பு
ஓடையில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுமி உடல் மீட்பு
ஓடையில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுமி உடல் மீட்பு
ADDED : டிச 17, 2024 07:02 AM

வானுார்; கிளியனுார் அருகே ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காத்தராயன் மகள் நர்மதா, 17; துளசிதாஸ் மகள் அனுஸ்ரீ, 16; இருவரும், நேற்று முன்தினம் புதுக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஏரி கலிங்கலுக்கு செல்லும் ஓடையை கடக்க முயன்றபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், நர்மதாவின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. அனுஸ்ரீயை வானுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிளியனுார் போலீசார் தேடி வந்தனர்.
நேற்று காலை முட்புதரில் சிக்கியிருந்த அனுஸ்ரீ உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.