/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு
/
பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு
ADDED : டிச 09, 2024 04:57 AM
விழுப்புரம் : ஆற்காடு அடுத்த வீரமடை கிராமத்தைச் சேர்ந் தவர் வெற்றிவேல், 45; விவசாய தொழிலாளி இவர், அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டதாக காணை போலீசுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடன், சம்பவ இடத் திற்கு விழுப்புரம் தீயணைப்புத் துறையினருடன் சென்றனர்.
அங்கு மாலை 5:00 மணி முதல் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் ரப்பர் படகு உதவியுடன் நீண்டநேரம் தேடினர்.
நீரோட்டம் அதிகமாகவும், இரவு நேரமானதாலும் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 8 கி.மீ., தொலைவில், மாரங்கியூரில் மதியம் 12:00 மணியளவில் வெற்றிவேல் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.