/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா பரிசளிப்பு
/
செஞ்சியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா பரிசளிப்பு
செஞ்சியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா பரிசளிப்பு
செஞ்சியில் புத்தக கண்காட்சி நிறைவு விழா பரிசளிப்பு
ADDED : ஜன 02, 2025 11:14 PM

செஞ்சி:செஞ்சியில் நடந்து வந்த 9 நாள் புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
செஞ்சி சாராதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் இம்மாதம் 1ம் தேதி வரை 9 நாள் செஞ்சி வாசிக்கிறது புத்தக கண்காட்சி திருவிழா நடந்தது.
இதன் நிறைவு விழாவுக்கு அறிவியில் இயக்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
வரவேற்பு குழு செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பு குழு சங்கரநாராயணன், தென்னரசு, தண்டபாணி, தமிழினியன், செந்தில்பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கலைச்செல்வன், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் நிறைவுரை நிகழ்த்தினர்.
ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி சிறப்புரை நிகழ்த்தி புத்தக கண்காட்சி குழுவினர் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.
பாரதி புத்தகாலயம் நாகராஜன், சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் சிவசங்கரி, நர்சரி முதல்வர் உஷா, சி.இ.ஓ., அருள் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாக குழு பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.