ADDED : டிச 20, 2025 06:56 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கிளை நுாலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது.
தமிழக அரசு 821 நுாலகங்களுக்கு தொல்லியல் துறை சார்ந்த புத்தகங்களை வழங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவெண்ணெய்நல்லுார் கிளை நுாலகத்தில் தொல்லியல் துறை புத்தகம் சார்ந்த புத்தக கண்காட்சி நடந்தது.
கண்காட்சிக்கு மாவட்ட நுாலக அலுவலர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் கணேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள், வாசகர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துரை மனோகரன் தலா 5,000 ரூபாய் செலுத்தி பெரும் புரவலராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் ராஜாராமன் கவுரி, ரஹமத் நிஷா ஷாஜகான், குமரகுருபரன், ஷேக்லத்தீப் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் ஆகியோர் தலா 1000 ரூபாய் செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டனர். கிளை நுாலகர் சசிகுமார் நன்றி கூறினார்.
