ADDED : மார் 29, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
அவலுார்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமிட்டு ஓட்டளிக்கவும். 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தும் விதமாகவும் துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படையினர், விழுப்புரம் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர்கள் அவலுார்பேட்டை அன்பழகன், செஞ்சி அண்ணாதுரை, வளத்தி ஞானசேகர், சத்தியமங்கலம் சுரேஷ்பாபு, அனந்தபுரம் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
