ADDED : ஜூன் 30, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
வானுார்:வானுார் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வானுார் அடுத்த தொள்ளாமூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சாரலி, 16; பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
இவர், நேற்று முன்தினம் எதிர் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், இறந்தார்.
வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
