/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ADDED : நவ 08, 2024 11:07 PM
செஞ்சி: செஞ்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள கஸ்பா காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வசந்தகுமார், 20; இவர், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தென்னந்தோப்பிற்கு காலை கடன் கழிக்க வந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
அதே சிறுமி நேற்று முன்தினம் காலைக்கடன் கழிக்க வந்த போது மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடன் அங்கிருந்தவர்கள் சிறுமியை காப்பாற்றினர்.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர்.