/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புத்துவாயம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
/
புத்துவாயம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED : மே 10, 2025 12:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் புத்துவாயம்மன் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பூச்சொரிதல் நடந்தது. எட்டு நாள் உற்சவத்தில் அன்ன வாகனம், கற்பக விருட்சகம், பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று காலை நடந்தது.
இதில், திருத்தேர், விநாயகர் தேர், சின்ன தேர் ஆகியவற்றை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 10ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் திருவிளக்கு ஏற்றுதல், வரும் 16ம் தேதி ஊரணி பொங்கல், முத்துபல்லக்கு நடக்கிறது.