/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்
/
மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED : ஆக 02, 2025 11:16 PM

மயிலம் : மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
மயிலம், மலையடிவாரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
5ம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம், கிராம மக்கள், மயிலம் தமிழ் கல்லுாரியினர் செய்து வருகின்றனர்.
வரும், 5ம் தேதியோடு, சிறப்பு வழிபாடு நிறைவு பெறுகிறது.

