/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை
/
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை
ADDED : பிப் 21, 2024 11:23 PM

வானுார், : ஆரோவில் அருகே விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்தால் , இறந்தவரின் உடலுக்கு அரசுஅதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
வானுார் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வர்ணமுத்து மகன் ஜெயராஜ்,46; தென்னகரத்தை சேர்ந்த காளிதாஸ்,54: இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்தனர். அப்பொழுது ஆரோவில் அருகே பின்புறம் வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்து காளிதாசை ஜிப்மரிலும், ஜெயராஜை சென்னை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடல் உறுப்பு தானம்
விபத்தில் படுகாயமடைந்த ஜெயராஜ் நேற்று அதிகாலை 1.00 மணிக்கு மூலச் சாவு அடைந்தார். இவருக்கு ஒரு மகன் இரு மகள் உள்ளனர். ஜெயராஜியின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்த அவரது உடலுக்கு ஆர்.டி.ஓ., காஜாமுகமது தலைமையில் வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, பி.டி.ஓ., கார்த்திகேயன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.