தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்  திண்டிவனத்தில் ஆய்வு

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்  திண்டிவனத்தில் ஆய்வு

 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுதிட்டம்  திண்டிவனத்தில் ஆய்வு


ADDED : பிப் 24, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் குறித்து நல வாரிய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டிவனம் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் தரமான சத்தான உணவு வழங்கபடுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு துாய்மைப் பணியாளர்கள் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பணியாளர்களிடம் காலை உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உணவு தயாரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டு அவர்களுக்கு சுகாதார முறைகள் குறித்து அறிவுறுத்தினார்.

திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பானுமதி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கணேசன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us