துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : பிப் 10, 2026 04:25 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,207 துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கியது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, நகராட்சி மற்றும் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சியில் 482, திண்டிவனம் நகராட்சியில் 217, கோட்டக்குப்பம் நகராட்சியில் 131, அனந்தபுரம் பேரூராட்சியில் 35, அரண்கண்டநல்லுார் பேரூராட்சியில் 32, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் 32, வளவனுார் பேரூராட்சியில் 56, விக்கிரவாண்டி பேரூராட்சியில் 50, மரக்காணம் பேரூராட்சியில் 75, செஞ்சி பேரூராட்சியில் 97 பேர் என 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ள 1,207 துாய்மைப் பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் பாலமுருகன் மண்டபத்தில், நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவங்கியது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்.எல்.ஏ., காலை உணவை பரிமாறி துவக்கி வைத்தனர்.
விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பி ரபு, துணைத் தலைவர் சித்திக்அலி, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகராட்சி கமிஷனர் வசந்தி, நகர் நல அலுவலர் ஸ்ரீபி ரியா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
வளவனுார் வளவனுார் பேரூராட்சியில் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் தனுஷ்கோடி, வார்டு கவுன்சிலர்கள் சசிகலா, மகாலட்சுமி, சந்திரா, வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி, கந்தன், பார்த்திபன், கீதா, உமாமகேஸ்வரி, பத்மாவதி நியமன உறுப்பினர் பூங்குன்றன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம் திண்டிவனம் நகராட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி காலை உணவை வழங்கி துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் பானுமதி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சந்திரன், பாஸ்கர், முத்துலட்சுமி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, சுகாதார அலுவலர் செந்தில். உதவி வருவாய் அலுவலர் அசோகன் பங்கேற்றனர்.
செஞ்சி செஞ்சி பேரூராட்சியில் சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயசங்கர் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவை வழங்கி துவக்கி வைத்தார். இது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்முறை நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
