ADDED : செப் 11, 2026 06:03 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாலையில் காலை உணவு திட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்,கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு காமராஜர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வி. சாலையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு கலெக்டர் அப்துல் ேஷக் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் உள்ளிட்டோர் சென்றனர்.
அங்கு காலை உணவை சாப்பிட்டு ,மாணவர்களுக்கு உணவு பரிமாறி சத்துணவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
பின்னர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து கல்லூரி டீனிடம் ஆலோசனை வழங்கினர்.
திண்டிவனம் சப் -கலெக்டர் ஆகாஷ், விழுப்புரம் சப்- கலெக்டர் ஸ்ரீ ரஷத், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன்,பி.டி.ஓ.,க்கள் சாகிதாபாணி, பாலச்சந்திரன், சத்துணவு மேலாளர் சண்முகம், மருத்துவக் கல்லுாரி டீன் லுாஸி நிர்மல் மெடோனா, மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார், ஆர். எம். ஓ., ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
