ADDED : செப் 22, 2026 03:31 PM

செஞ்சி: தமிழகத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் விஜய் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, செஞ்சி ஒன்றியம் தேவதானம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அன்னமயில் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சங்கீதா வரவேற்றார். கணேஷ்குமார் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், உதயகுமார், பள்ளி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் செல்வகுமார், வட்டார மகளிர் திட்ட அலுவலர் காயத்ரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா குமார் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
