ADDED : செப் 22, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி, காந்தி பஜார் அரசு நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான காமராஜர் காலை சிற்றுண்டி திட்டத்தின் விரிவாக்கம் தொடக்க விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர்கள் ஆயிஷா பேகம், தேவதாஸ், கிரிஜா ஆகியோர் வரவேற்றனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், சுமித்ரா சங்கர், பொன்னம்பலம், உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
