/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
/
உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
ADDED : ஏப் 16, 2025 08:14 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் ரயில்வே காலனி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் வழக்கமாக பூஜையை முடித்துவிட்டு, கோவில் பூசாரி காந்தி, 54; கதவை மூடி சென்றார். நள்ளிரவு கோவில் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கோவில் இரும்பு உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணம் மற்றும் இரண்டு வெண்கல மணிகள், தொங்கும் விளக்கு, பித்தளை தவளை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு குறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.