/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 04, 2025 11:09 PM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் புறவழிச்சாலையை அடைந்தது.
ஊர்வலத்தில் தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர் .
விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரி, மயிலம் செவிலியர் கல்லுாரி, செஞ்சி ரங்கபூபதி செவிலி யர் கல்லுாரி மற்றும் மருத் துவக் கல்லுாரி மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பா ளர் பார்த்தசாரதி, துணை முதல்வர் தாரணி, துறை தலைவர்கள் திலகவதி, ராஜேஸ்வரி, குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் இளையராஜா, வினோத்குமார், செவிலியர் கண் காணிப்பாளர் பொற்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.