ADDED : ஆக 10, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: முப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் இணைந்து நடத்திய விழாவிற்கு, சங்கத் தலைவர் பால விக்னேஷ் தலைமை தாங்கினார். முப்புளி ஊராட்சி துணைத் தலைவர் தனசேகர் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவர் ரூபிஷ்மா தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
சிறப்பு விருந்தினர் மண்டல தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் தினகரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர்கள் செந்தில்குமார், வீராசாமி, பொருளாளர் தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 54 மகப்பேறு பெற்ற பெண்களுக்கு பேரிச்சம்பழம், ஹார்லிக்ஸ், பிரட், பிஸ்கெட் பாக்கெட்கள், பழவகைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
