ADDED : ஏப் 15, 2026 10:47 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அருகே வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கார்த்திகேயன்,35; கொத்தனா. இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இவர், நேற்று விழுப்புரம், ஆசாகுளம் பகுதியை சேர்ந்த அசாருதீன் என்பவர் வீட்டில், சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கார்த்திகேயன் வீட்டின் முதல் மாடியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்த போது, தலைக்கு மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் பட்டு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
