ADDED : ஏப் 23, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: ஒலக்கூர் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிறுவிளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த், 40; கொத்தனார். இவர், ஒலக்கூர் அடுத்த ஆலக்கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இங்கு கொடும்பாவி இழுத்து வந்த போது, ஷாமியானா இரும்பு பைப்பில் கை பட்டு, அதிலிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வசந்த் இறந்தார். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
