/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெஞ்சல் புயலில் பாதித்த பாலம்; மயான பாதை சீரமைப்பு பணிகள் 'ஜரூர்'
/
பெஞ்சல் புயலில் பாதித்த பாலம்; மயான பாதை சீரமைப்பு பணிகள் 'ஜரூர்'
பெஞ்சல் புயலில் பாதித்த பாலம்; மயான பாதை சீரமைப்பு பணிகள் 'ஜரூர்'
பெஞ்சல் புயலில் பாதித்த பாலம்; மயான பாதை சீரமைப்பு பணிகள் 'ஜரூர்'
ADDED : ஆக 19, 2025 12:14 AM

வி க் கிரவாண்டியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வராக ஆற்றுப்பாலம், மயான பாதை 'தினமலர்' செய்தி எதிரொலியால் சீரமைக்கும் பணி நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர், டி சம்பர் மாதங்களில் பெய்த மழை மற்றும் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விக்கிரவாண்டி வராக நதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆற்று பாலம் வடக்கு பகுதியில் சேதமடைந்தும் ,மயான பாதையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்த பழைய ஆற்றுப்பாலத்தின் வழியாக உள்ளூர் வாசிகள் போக்குவரத்து பாதிப்பின்றி எளிதாக சென்று வந்தனர். மேலும் புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது இந்த பழைய சாலையின் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு பயணிக்கும் சாலையாகவும் இருந்தது. மயான பாதை சேதமானதால் சடலங்களை எடுத்துச் செல்ல பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் ஆற்று பால த்தையும் மயான பாதையையும் சீரமைக்க வேண்டும் என செய்தி வெளியானது. தேசிய நெடுஞ்சாலையின் கடுப்பாட்டில் இருந்த பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க முன் வராத நிலையில் பொதுமக்களின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி சார்பில் பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக பழைய ஆற்றுப் பாலத்தில் மேற்கு புறத்தில் கான்கிரீட் சுவர் அமைத்து, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கரை அரித்துச் செல்லாதபடி கருங்கற்களால் தடுப்புச் சுவர் அமைத்து பார் மண் கொட்டி நிரப்பி பாலம் இணைக்கும் பணி மற்றும், மயான பாதை சீரமைக்கும் பணியும் துவங்கி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.