/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 01, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரபு, 39; இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருன் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.