/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அக்கா கணவருக்கு வெட்டு மைத்துனர் வெறிச்செயல்
/
அக்கா கணவருக்கு வெட்டு மைத்துனர் வெறிச்செயல்
ADDED : அக் 31, 2025 02:42 AM

வானுார்:  அக்காவுடன் சேர்ந்த வாழாத ஆத்திரத்தில், மாமாவை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற மைத்துனர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவருடைய மனைவி திலகா. இவர்களுக்கு  ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
குடும்ப பிரச்னையில், மணிகண்டன் தனது மனைவியை பிறந்து,  2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார். புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த திலகாவின் தம்பி மணி, சமரசம் செய்தும் மணிகண்டன் கேட்காமல், மணியிடமும் தகராறு செய்துள்ளர்.
இந்நிலையில் நேற்று மணிகண்டன், ஜீப்பில் புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானுார் நாவற்குளம் பகுதியில் சென்றார். அவரை பின்தொடர்ந்து, பைக்கில் வந்த மைத்துனர் மணி, அவரது நண்பரான ராஜ் ஆகியோர் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
அதில் அவருக்கு தலை, கழுத்து, கை   உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி, ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

