/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொலை வழக்கில் சகோதரியர் 12 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
/
கொலை வழக்கில் சகோதரியர் 12 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
கொலை வழக்கில் சகோதரியர் 12 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
கொலை வழக்கில் சகோதரியர் 12 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
ADDED : செப் 10, 2025 03:48 AM

விழுப்புரம்:வி ழுப்புரம் அருகே கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான அக்கா, தங்கையை, 12 ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வீரபெருமாநல்லுாரை சேர்ந்தவர் நடராஜ். இவர், அக்கா, தங்கையான மங்கை, 40, பிரியா, 29, ஆகியோரை திருமணம் செய்தவர். பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரராகவன், 42, என்பவருக்கும், மங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுக்கு இடையே பிரச்னையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2013, ஜூன் 6ல் பஞ்சமாதேவியில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்த வீரராகவனை, மங்கை, பிரியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர்.
வளவனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சகோதரிகள் இருவரும், 12 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதனால், இருவருக்கும் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
வளவனுார் போலீசார், செங்கல் சூளையில் வேலை செய்த மங்கையை ஈரோடிலும், பிரியாவை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலும் நேற்று பிடித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.