சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மனு
சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மனு
ADDED : ஜூலை 14, 2026 10:09 PM

விழுப்புரம்: விழுப்புரம் டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோர் சங்கத்தினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கூலி உயர்வு கேட்டு மனு அளித்தனர்.
மனு விபரம்:
விழுப்புரம் மாவட்டத்தில், டி.என்.சி.எஸ்.சி. கிடங்கில் கடந்த 54 ஆண்டுகளாக பணி நிரந்தரமின்றியும், உரிய கூலி உயர்வுமின்றி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொது விநியோக திட்டத்திற்கான மூட்டை துாக்கி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த 1972 முதல் ஒரு மூட்டைக்கு 8 பைசா வழங்கினர். தற்போது, 1.87 ரூபாய் தருகின்றனர்.
பொது விநியோகத் திட்ட மூட்டைகள் ஏற்றும்போது, அதிகளவில் மூட்டைகள் ஏற்றி அடுக்குவதால், பிற மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை சார்பில் வழங்கப்படும் கூடுதல் கூலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வழங்கப்படுவதில்லை.
இந்த கூலி வழங்கா விட்டால், மூட்டைகளை ஏற்ற மாட்டோம் என கடந்த வாரம் நாங்கள் கூறியதால், கிடங்கு மண்டல மேலாளர் எங்கள் சங்கத்தை அழைத்து பேசினார்.
ஆனால், இணைப் பதிவாளர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இனி, லாரிக்கு உரிய மூட்டைகளை ஏற்றினால் போதும், கூடுதலாக ஏற்ற வேண்டியதில்லை. கூடுதல் கூலியும் தர முடியாது என கூறி மறுக்கின்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரிகள் சிலர், தங்களின் உறவினர்களின் லாரி ஓடுவதால், கூடுதல் கூலி தர மறுக்கின்றனர். இதனால், வரும் 20ம் தேதி முதல் மூட்டைகளுக்கான அடுக்கு கூலி தராவிட்டால், அவர்களாகவே லாரிகளில் மூட்டைகளை அடுக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
