/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரைவருக்கு வலிப்பு மரத்தில் மோதிய பஸ் மயிலம் அருகே பரபரப்பு
/
டிரைவருக்கு வலிப்பு மரத்தில் மோதிய பஸ் மயிலம் அருகே பரபரப்பு
டிரைவருக்கு வலிப்பு மரத்தில் மோதிய பஸ் மயிலம் அருகே பரபரப்பு
டிரைவருக்கு வலிப்பு மரத்தில் மோதிய பஸ் மயிலம் அருகே பரபரப்பு
ADDED : டிச 20, 2025 07:21 AM

மயிலம்: மயிலம் அருகே பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமின்றி தப்பினர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக நேற்று காலை 7:10 மணிக்கு விழுப்புரத்திற்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வி.சாலை கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவர் ஓட்டினார். பஸ்சில் 3 பயணிகள் மட்டுமே இருந்தனர்.
பஸ் மயிலம் - செண்டூர் சாலையில் சென்றபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் சமார்த்தியமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்கவும், பஸ்சில் பயணிகளை காப்பாற்றவும் பஸ்சின் வேகத்தை குறைத்து சாலையோர வேப்ப மரத்தின் மீது மோதி நிறுத்தினார்.
உடன் அப்பகுதி மக்கள் மயங்கிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் திருமலையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பஸ்சில் வந்த பயணிகள் 3 பேர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் காயமின்றி தப்பினர்.
விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

