/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலையத்தில் பள்ளம் டிரைவர்கள் கடும் அவதி
/
பஸ் நிலையத்தில் பள்ளம் டிரைவர்கள் கடும் அவதி
ADDED : டிச 10, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், அரசு பஸ் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சென்னை மார்க்க பஸ் நிறுத்தம் வளைவு பகுதியில், பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பஸ்களை திருப்பும்போது பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

