sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரகண்டநல்லூருக்கு புறவழிச்சாலை... அமைக்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை

/

அரகண்டநல்லூருக்கு புறவழிச்சாலை... அமைக்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை

அரகண்டநல்லூருக்கு புறவழிச்சாலை... அமைக்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை

அரகண்டநல்லூருக்கு புறவழிச்சாலை... அமைக்கப்படுமா? மக்கள் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை


ADDED : ஜன 29, 2024 06:18 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லுாரில் துவங்கி மணம்பூண்டி, தபோவனம் வரை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். மேலும், நிரந்தர தீர்வாக அரகண்டநல்லுாருக்கு புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இதனை மணலுார்பேட்டை, மூங்கில்துறைபட்டு, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான வாகன ஓட்டிகள், விழுப்புரம், சென்னை செல்ல பயன்படுத்துகின்றனர். ஆனால், இச்சாலையை விரிவுபடுத்தி மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக அரகண்டநல்லுார் கடைவீதியில் புளிய மரங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக நிற்கின்றன. ஆக்கிரமிப்பு அகற்றி பார்த்தால் நடுரோட்டில் மரம் இருப்பது நெடுஞ்சாலைத்துறைக்கு நன்கு தெரியும். ஆனால், இதனை கண்டும் காணாதது போல் மரங்களை அகற்ற முன்வரவில்லை.

சென்னகுணம், கண்டாச்சிபுரம், ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்கோவிலுார் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தினசரி 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கரும்பு ஏற்றிச் செல்லும் நிலையில், ஆபத்தான அரகண்டநல்லுார் ரயில்வே கிராசிங்கை கடந்தாலும், கடைவீதியை கடப்பது மிகவும் கடினமாக உள்ளது.

அதையும் தாண்டி மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பு ஏற்றத்தில் ஏறுவது டிராக்டர் டிரைவர்களுக்கு ஒரு சாகசம்தான். அதன்பிறகு தபோவனம் வரை மிகக் குறுகலான சாலையில் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலுாரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் விழுப்புரம் செல்ல வேண்டும் என்றால் அரகண்டநல்லுாரைக் கடக்க 30 நிமிடம் வரை ஆகிறது.

கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இந்த சிரமம் அல்ல. ஜனவரி மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை நெல், உளுந்து உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டுவரும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மணி கணக்கில் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.

இந்த பிரச்னையைத் தீர்க்க அரகண்டநல்லுார் மாணவர் விடுதியில் இருந்து நேராக தேவனுார் சென்று துரிஞ்சலாற்று பாலத்தை இணைக்கும் வகையில் புறவழிச் சாலையை ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரகண்டநல்லுாரையும் - திருக்கோவிலுாரையும் இணைக்கும் பழுதடைந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது. இதனால், அரகண்டநல்லுாரைக் கடக்கும் வாகனங்கள் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கு நெடுஞ்சாலைத்துறை தீர்வு காண வேண்டியது அவசர அவசியமாக இருக்கிறது.






      Dinamalar
      Follow us