/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குளத்தின் நடுவே கேபிள் பழுது: ரப்பர் படகில் சென்று சீரமைப்பு
/
குளத்தின் நடுவே கேபிள் பழுது: ரப்பர் படகில் சென்று சீரமைப்பு
குளத்தின் நடுவே கேபிள் பழுது: ரப்பர் படகில் சென்று சீரமைப்பு
குளத்தின் நடுவே கேபிள் பழுது: ரப்பர் படகில் சென்று சீரமைப்பு
ADDED : ஏப் 17, 2025 05:09 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக குளத்தில், தீயணைப்பு ரப்பர் படகு மூலம் சென்று, ஊழியர்கள் கேபிள் இணைப்பை சரிசெய்தனர்.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறிய குளம், நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், சேரும், சகதியும், கொடிகள், புதர்கள் மண்டியுள்ளது.
குளத்தின் மையத்தில் மூங்கில் தோப்பும் அடர்ந்து காணப்படுகிறது. குளத்தின் வழியாக லெக்டர் அலுவலகத்திற்கு, இணைய வசதிக்காக வரும் கண்ணாடி இழை கேபிள், மூங்கில் புதரில் சிக்கி துண்டாகி, இணைய வசதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டது.
குளத்தின் நடுவே பழுதான கண்ணாடி இழை கேபிள் சரிசெய்ய முடியாமல் தொழில் நுட்ப ஊழியர்கள் தவித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நேற்று காலை பேரிடர் மீட்பு பணிக்கு பயன்படுத்தும் ரப்பர் படகை கொண்டு வந்தனர்.
குளத்தில் செடி, கொடிகளை அகற்றி அதில், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகை இயக்கி மைய பகுதிக்கு, தொழில் நுட்ப ஊழியர்களை அழைத்து சென்றனர்.
அங்கு, கண்ணாடி இழை கேபிளை சீர்செய்து, இணைப்பு ஏற்படுத்தினர்.