/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 05, 2025 08:11 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்கு தங்களை இணைத்து தொண்டு செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருது பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
இந்த சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள், சாதனைகள் குறிப்பிடப்பட வேண்டும்.
இவ்விருதினை பெற தகுதியுடையோர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.