/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருந்தாளர் போட்டி தேர்வு இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
மருந்தாளர் போட்டி தேர்வு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஏப் 10, 2025 04:36 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடக்கவுள்ள மருந்தாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2 முதன்மை தேர்வு, நில அளவையர், வரைவாளர், இரண்டாம் நிலை போலீஸ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
தற்போது, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 425 பணியிடங்களுக்கான மருந்தாளர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளுக்கு தயாராகும் விழுப்புரம் மாவட்டத்தினருக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 16ம் தேதி முதல் துவங்கவுள்ளன. பயிற்சி வகுப்புகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கவுள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மருந்தாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்ப நகல், புகைப்படம், ஆதார் ஆகிய விபரங்களோடு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

