/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரீப் பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
/
காரீப் பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
காரீப் பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
காரீப் பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : ஆக 13, 2025 05:34 AM
விழுப்புரம் : மாவட்டத்தில் காரீப் பருவ சாகுபடி பயிர்களுக்கு, காப்பீடு செய்யலாம் எ ன வேளாண் துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு, 13 வட்டாரங்களில் உள்ள, 380 வருவாய் கிராமங்களில் நெல் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கடலை, 24 குறு வட்டங்களிலும், கம்பு, 8 குறு வட்டங்களிலும் பயிர்காப்பீடு செய்ய அறிவிப்பு
செய்யப்பட்டுள்ளது.
காரீப் பருவத்தில் நெல்-1 நடவு செய்துள்ள விவசாயிகள் வரும், 14ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நிலக்கடலை, கம்பு நடவு செய்துள்ள விவசாயிகள் வரும், 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளலாம்.