/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
13, 14 தேதிகளில் தாலுகா, ஆர்.ஐ., அலுவலகங்களில்... முகாம்; வெள்ளத்தால் சேதமான ஆவணங்களை பெறலாம்
/
13, 14 தேதிகளில் தாலுகா, ஆர்.ஐ., அலுவலகங்களில்... முகாம்; வெள்ளத்தால் சேதமான ஆவணங்களை பெறலாம்
13, 14 தேதிகளில் தாலுகா, ஆர்.ஐ., அலுவலகங்களில்... முகாம்; வெள்ளத்தால் சேதமான ஆவணங்களை பெறலாம்
13, 14 தேதிகளில் தாலுகா, ஆர்.ஐ., அலுவலகங்களில்... முகாம்; வெள்ளத்தால் சேதமான ஆவணங்களை பெறலாம்
ADDED : டிச 11, 2024 04:54 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த பகுதி பொதுமக்கள், அரசு ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 13, 14ம் தேதிகளில் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பால் ஏற்பட்ட கனமழை, தென்பெண்ணை ஆறு வெள்ளப்பெருக்கால் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்கள் கடுமையாக பாதித்தது.
இதையொட்டி, இந்த தாலுகாக்களில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டுகளை இழந்தோருக்கு சிறப்பு முகாம் நடத்தி புதிதாக வழங்கப்பட உள்ளது.
இந்த முகாம், வரும் 13ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த நாளில், விழுப்புரம் குறுவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இங்குள்ள தாலுகா அலுவலக வளாகத்திலும், கண்டமங்கலம் குறுவட்ட கிராமங்களுக்கு பி.டி.ஓ., அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
விக்கிரவாண்டி குறுவட்டத்திற்கு, தாலுகா அலுவலக வளாகத்திலும், சித்தலம்பட்டுக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.
வானுாருக்கு தாலுகா அலுவலக வளாகத்திலும், கிளியனுாருக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது.
மேலும், முகையூர் குறுவட்டத்திற்கு கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திலும், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் அரசூருக்கு அப்பகுதிகளில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் நடக்கிறது.
மரக்காணத்திற்கு தாலுகா அலுவலகத்திலும், சிறுவாடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், திண்டிவனம், வடசிறுவளுருக்கு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திலும், ஆவணிப்பூர், ஒலக்கூர் குறுவட்ட கிராமங்களுக்கு, ஒலக்கூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.
செஞ்சி, சத்தியமங்கலத்திற்கு செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், வல்லம், மேல்ஒலக்கூருக்கு, வல்லம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் முகாம் நடக்கிறது.
வரும் 14ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, காணை குறுவட்டத்திற்கு, இங்குள்ள பி.டி.ஓ., அலுவலகத்திலும், வளவனுாருக்கு கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகத்திலும், கஞ்சனுார் மற்றும் அன்னியூருக்கு அப்பகுதிகளில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது.
உப்புவேலுார் குறுவட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், நெமிலிக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், அரகண்டநல்லுார், சித்தலிங்கமடம், பிரம்மதேசம், தீவனுார் ஆகிய குறுவட்டங்களுக்கு அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடக்கிறது.
மயிலம், ரெட்டணைக்கு மயிலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி கலெக்டர் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.