/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் துவங்க வேண்டும்: லட்சுமணன் எம்.எல்.ஏ.,
/
அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் துவங்க வேண்டும்: லட்சுமணன் எம்.எல்.ஏ.,
அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் துவங்க வேண்டும்: லட்சுமணன் எம்.எல்.ஏ.,
அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் துவங்க வேண்டும்: லட்சுமணன் எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 17, 2025 11:46 PM

விழுப்புரம்: தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரத்தை கட்சியினர் துவங்க வேண்டும் என்று, மாவட்ட செயலர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டமங்கலம் மத்திய, தெற்கு, மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சி அலுவலகங்கள் திறப்பு விழா, அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் சீனுசெல்வரங்கம், செல்வமணி, பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, கட்சி அலுவலகங்களை திறந்து வைத்தும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்.
தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது;
தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று, தேர்தல் பிரசார பணியை துவங்க வேண்டும். இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை நடத்தி, அனைத்து துறையிலும் தமிழகத்தை முன்னோடியாக கொண்டு செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பதவி ஏற்க நாம் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.
ஆதிதிராவிட நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், ஒன்றிய சேர்மன் வாசன், வழக்கறிஞர் கோதண்டபாணி, சிறுபான்மையினர் அணி தமின், மாவட்ட கவுன்சிலர் மணிமொழி செல்வரங்கம், ஒன்றிய நிர்வாகிகள் வெற்றிச்செல்வி, தேவகணபதி, முருகன், பாலசுப்ரமணியன், பிரவீன்குமார், மோகன்தாஸ், குமணன், ஜெயலட்சுமி, அசோக்குமார், ராஜசேகர், முரளி, முருகன், சுந்தரமூர்த்தி, பூங்குன்றம், ராஜேந்திரன், ஏழுமலை, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் அமுதா அய்யனார், ராம்குமார், விஜயலட்சுமி செல்வமணி, பாலசுப்பிரமணியன், செல்வகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.