/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டை மலை சரிவில் பீரங்கி இந்திய தொல்லியல் துறை மீட்குமா?
/
செஞ்சி கோட்டை மலை சரிவில் பீரங்கி இந்திய தொல்லியல் துறை மீட்குமா?
செஞ்சி கோட்டை மலை சரிவில் பீரங்கி இந்திய தொல்லியல் துறை மீட்குமா?
செஞ்சி கோட்டை மலை சரிவில் பீரங்கி இந்திய தொல்லியல் துறை மீட்குமா?
ADDED : அக் 01, 2024 07:19 AM

செஞ்சி ராஜகிரி கோட்டை மலைச்சரிவில் கிடக்கும் பீரங்கியை மீட்க இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சி கோட்டை இந்தியாவில் உள்ள வலிமையான கோட்டைகளில் ஒன்றாக உள்ளது. கோனார் வசம்த்தினர், நாயக்க மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டியர்கள், முகம்மதியர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுகாரர்கள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்துள்ளனர். பல போர்களை சந்தித்த பின்னரும் செஞ்சி கோட்டை முழு அமைப்புடன் உள்ளது.
செஞ்சி கோட்டை மீது போர் நடத்திய பிரஞ்சுகாரர்களும், ஆங்கிலேயேர்களும் பீரங்கிகளை பயன்படுத்தினர்.
பின்னர் கோட்டையின் பாதுகாப்பிற்காக மிகப்பெரிய பீரங்கிகளை கோட்டையில் பல இடங்களில் நிறுவினர்.
போர் நடந்த போது இந்த பீரங்கிகளில் பெரும் பகுதியை மலை மீதிருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் 20 அடி நீளமுள்ள பெரிய அளவிலான பீரங்கி ராஜகிரி கோட்டையின் வடகிழக்கு மூலையில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் பாறை சரிவுகளுக்கிடையில் உள்ளது.
யுனெஸ்கோ செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்க உள்ளது. அதன் பிறகு செஞ்சி கோட்டைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.
எனவே செஞ்சி கோட்டைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள பீரங்கியை மீட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.