ADDED : அக் 25, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
இதில், டாக்டர் ஷெரீன், பேசுகையில், புற்று நோயை ஆரம்ப காலத்தில் அறிந்து, மருந்துகள் சாப்பிட்டு, உரிய சிகிச்சை முறைகளை கையாண்டால், அந்த நோயிலிருந்து விடுபடலாம் என கூறினார்.
இதைத்தொடர்ந்து, சித்த மருத்துவர் பாலசுப்ரமணி, 20 பேருக்கு நெல்லிக்கனி லேகியத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

