ADDED : பிப் 17, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் இ.எஸ்., கல்விக்குழுமம் சார்பில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு, இ.எஸ்., கல்விக்குழுமத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார்.
இ.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் ஆமோஸ்ட் ராபர்ட் ஜெயச்சந்திரன், இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் தேவிஸ்ரீ, புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து கருத்துரையாற்றினார்.
மேலும், மாணவிகளுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.
பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.