
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : செஞ்சி அருகே, அவலுார்பேட்டையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் ஆடி 3ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையை மன்ற பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் நடத்தி வைத்தார்.
இந்த பூஜையில், பெண்களுக்கு மங்கல பொருட்கள், ஆடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டன.
இதில், அலமேலு, ராணி, வெண்ணிலா, மாலதி, மகேஸ்வரி, ஜெயந்தி, கோபால்சாமி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

