நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார், நத்தமேடு நரிக்குறவர் காலனியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடன், போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.