ADDED : மார் 22, 2025 03:39 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, வண்டிமேடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1,660 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 90 பாக்கெட் குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் கள் விழுப்புரம், சாலாமேடு ரங்கராஜன் மகன் கேசவராஜ், 28; கண்ணப்பநாயனார் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் சையத்ஷாகுல், 25; என்பதும், கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா, புகையிலையை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களுக்கு சப்ளை செய்த சம்சுதீன், சசிகுமார் (எ) சத்தியநாராயணன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.