/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதல்; 2 மாணவர்கள் படுகாயம்
/
பைக் மீது கார் மோதல்; 2 மாணவர்கள் படுகாயம்
ADDED : ஜூன் 11, 2025 07:10 AM
செஞ்சி; செஞ்சி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனம், செஞ்சி ரோட்டை சேர்ந்தவர் சரவணன் மகன் அரவிந்த், 18; கீழ் செவலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் பரத்,18; இருவரும், ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கல்லூரிக்கு சென்று விட்டு செஞ்சிக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
செஞ்சி கோட்டை அருகே வந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் அரவிந்தனின் வலது பக்க தோள்பட்டை எலும்பும், பரத்திற்கு இடுப்பு எலும்பும் முறிந்தது. இருவரையும் சிகிச்சைக் காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.