ADDED : அக் 13, 2024 07:56 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதியதில் மினி சரக்கு வேன் டிரைவர் இறந்தார்.
விக்கிரவாண்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் முருகையன், 48; மினி சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று இரவு 8:20 மணியளவில் விக்கிரவாண்டி செல்ல தெற்கு பைபாஸ் முனையில் தனது பைக்கில் சாலையைக் கடந்தார்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஹூண்டாய் கிரீட்டா கார் பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முருகை யன் 30 அடி துாரம் துாக்கி எறியப்பட்டு அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டி வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜாமணி, 35; மற்றும் அவருடன் வந்த சிவக்குமார், 25; ஆகியோர் காயமின்றி தப்பினார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.