/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் டயர் வெடித்து பைக்குகள் மீது மோதல்: 2 பேர் பரிதாப பலி
/
கார் டயர் வெடித்து பைக்குகள் மீது மோதல்: 2 பேர் பரிதாப பலி
கார் டயர் வெடித்து பைக்குகள் மீது மோதல்: 2 பேர் பரிதாப பலி
கார் டயர் வெடித்து பைக்குகள் மீது மோதல்: 2 பேர் பரிதாப பலி
ADDED : நவ 11, 2024 06:56 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கார் டயர் வெடித்து, எதிரே வந்த 3 பைக்குகள் மீது மோதிய விபத்தில் இன்ஜினியர் உட்பட 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று மாலை 6:30 மணிக்கு மகேந்திரா டியுவி கார் சென்றது. ராதாபுரம் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், எதிரே விழுப்புரம் நோக்கி வந்த 3 பைக்குகள் மீது மோதியது.
விபத்தில் காரில் சென்ற பில்லுாரைச் சேர்ந்த இன்ஜினியர் கருணாகரன், 40; சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் பைக்கில் சென்ற மனைவி பாக்கியலட்சுமி, 36; மற்றொரு பைக்கில் வந்த ராதாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, 40; அவருடன் வந்த மகன் யாசின், 7; மற்றொரு பைக்கில் வந்த ஒருவர் என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடன் நால்வரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே ஒருவர் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து காரில் வந்தவர்களுடன் தலைமறைவானார்.
விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விபத்தில் இறந்த மற்றொரு நபர் யார் என, விசாரிக்கின்றனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய காரில் வந்தவர்களை தேடி வருகின்றனர்.