/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்கு
/
பெண் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2024 12:05 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி, 23; இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் 19 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். முத்துபாண்டி நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
நேற்றுமுன்தினம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நின்றிருந்த அந்த பெண்ணிடம், முத்துபாண்டி, ஏன் பேச மறுக்கிறாய் எனக் கேட்டு திட்டி, தாக்கினார். அப்போது அங்கிருந்த ராமநஞ்சபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், 34; என்பவர் முத்துபாண்டியை தாக்கினார்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், முத்துபாண்டி, மதிவாணன் ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.