/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் மறியல் 50 பேர் மீது வழக்கு
/
வானுாரில் மறியல் 50 பேர் மீது வழக்கு
ADDED : டிச 20, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நேற்று முன்தினம் வானுார் அடுத்த குன்னம் கிராம மக்கள், புதுச்சேரி - மயிலம் ரோடு தொள்ளாமூர் செல்லும் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் மறியலை கைவிடவில்லை.
அப்போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததோடு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களிடம் வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி, கலைய செய்தார். இருப்பினும், பொது இடத்தில் மறியலில் ஈடுப்பட்டதாக 50 பேர் மீது வானுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.