/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 03, 2024 12:03 AM
திருவெண்ணெய்நல்லுார், -முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 70; விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இருவரது குடும்பத்திற்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
கடந்த 28ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிவண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஏழுமலை, மோகன், பிரகாஷ், அழகம்மாள் ஆகிய நான்கு பேரையும் தாக்கினர்.
இது குறித்து இருதரப்பு புகாரின் பேரில் மணிவண்ணன், காந்திமதி, தனசேகர், பிரசாந்த், ஏழுமலை, மோகன், பிரகாஷ், அழகம்மாள் ஆகிய 8 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

