/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடையூறாக பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
இடையூறாக பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது வழக்கு
இடையூறாக பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது வழக்கு
இடையூறாக பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2024 04:29 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்த அ.தி.மு.க., தி.மு.க., பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார், நேற்று சென்னை நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அங்கு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பேனர் வைத்திருந்தனர்.
இடையூறாக பேனர் வைத்த அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
அதே போல், வண்டிமேடு அருகே பேனர் வைத்திருந்த அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கவுதமன், நகர ஜெ., பேரவை செயலாளர் ராஜாராம் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதே சாலையில், சேலத்தில் நடக்கவுள்ள தி.மு.க., இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பேனர் வைத்த தி.மு.க., 12வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் சந்திரன் மீது மேற்கு போலீசார் வழக்குப் பதிந்தனர்.