ADDED : மார் 02, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டவரை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆனந்தன், 49; இவரது மகன் அஜய் என்பவருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக, சாலாமேட்டை சேர்ந்த புருேஷாத்தமன், 34; மற்றும் அவரது மனைவி சந்திரலேகா ஆகியோர், ஆனந்தனிடம் 12 லட்சம் ரூபாய் வாங்கினர்.
அந்த பணத்தை நேற்று முன்தினம் திருப்பிக்கேட்ட ஆனந்தனை, புருேஷாத்தமன், சந்திரலேகா ஆகியோர் சேர்ந்து திட்டி மிரட்டல் விடுத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் புருேஷாத்தமன், சந்திரலேகா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
