/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2024 06:19 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனம், முருங்கப் பாக்கம், சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராணி, 50; இவர்களது மகன்கள் கேசவன், 39; மணிகண்டன், 33; இவர் கள் புதியதாக வீடு கட்டி வருகின்றனர்.
இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக நேற்று காலை 7:30 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், கவுன்சிலர் ரேணுகா, அவரது மகன் ரகுபதி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து, ரகுபதி, 28; மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.